12.4.15

சொல்லாமல் துடிக்கும் என் காதல்

சொல்லாமல் துடிக்கும்  என் காதல் 

நெத்தியில வல்ல இறைவன்
பச்சையாக 
குத்தி வச்சது - நான்
சுத்திவரும் உன் பெயரா ?


சிரிச்சிக்கிட்டே பேசுரியே நான்
நெருங்கி வந்து - என்
காதல் சொன்னால்
முறச்சிக்கிட்டு போவியா ?


உன்னோடு பேசனுமெண்டு
சுவரோடு பேசுரேண்டி
என்னருகில் நீ வந்தால்
மழலை மொழி வந்துரும்டி


சுவாசமா உன் நினைவ
வாங்குரேண்டி
உன்னையே நெஞ்சுலயும்
தாங்குரேண்டி
என் காதல் சொல்லனுமெண்டு
ஏங்குரேண்டி
சொல்ல முடியாம நான்
சாகுரேண்டி


வேகமாக நடந்துடாத
வெந்து போகுது என் மனசு
புன்னகைய பதுக்காத
புன்னாகுது என் மனசு


ஓரக்கண்ணால நீ பார்த்து
ஒரசிக்கிட்டே போரவளே - நீ
பார்க்காம போனாலே
பத்துதடி என் உசிரு

@ ஏ.எச்.எம் றிழ்வான்